கே எஸ் ஆர் கல்லூரியில் 42வது நிறுவனர் தின விழா

கே எஸ் ஆர் கல்லூரியில் 42வது நிறுவனர் தின விழா
X
கே எஸ் ஆர் கல்லூரியில் 42வது நிறுவனர் தின விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் 42வது நிறுவனர் தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நிறுவனர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சச்சின்,அட்மின் இயக்குனர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். . கே எஸ் ஆர் காலேஜ் ஆப் டெக்னாலஜி முதல்வர் கோபாலகிருஷ்ணன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறை எடுத்து கூறினார்.சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டுசிறந்த பதவிகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களுக்கும் பாராட்டி கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார் தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் மற்றும் பழக்கங்கள் வழங்கி கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசிய போது கூறியதாவது.திருச்செங்கோடு என்று சொல்கிற போது அர்த்தநாரீஸ்வரர் கோவில் மட்டுமல்ல கே எஸ் ஆர் கல்வி நிறுவனமும் நினைவுக்கு வருகிறது.வட மாநிலங்களில் பெயருக்கு பின்னால் குலப்பெயர் தான் இருக்கும் அது மனிதரை மனிதர் வேறுபடுத்தி காட்டும் ஆனால் படித்து வாங்குகிற பட்டம் எல்லோரையும் ஒரே நிலையில் தான் பார்க்கும் தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவிலேயே தனித்து விளங்குகிறது. முன்னாள் மாணவர்கள் மாணவியர்கள் கம்பீரமாக நடை போட்டு வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட அந்த மரியாதையை பெற்றுக்கொண்டு சென்றார்களே இன்றைக்கு உலகத்தில் பல்வேறு பகுதிகளில் அவர்கள் நிலைத்து உயர்ந்து இருப்பதற்கு காரணம் இந்த வளாகம் என்பதை மறக்காமல் அவர்களும் வந்திருக்கிறார்கள். கல்விதான் சமுதாயத்தில் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற உணர்வு பெரியார் காலத்திலே தொடங்கி இன்றைக்கு கே எஸ் ஆர் என்கிற இந்த கல்வி நிறுவனம் வரை வளர்ந்து நிற்கிறது.ஐநா சபை வரை சென்று பேசியவன் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டபோது கூறினார்கள் அதற்கான வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்தவர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளித்தவர்கள் எனது பள்ளி ஆசிரியர்கள் தான் அவ்வாறு எனக்கு ஐநா சபையில் பேச வாய்ப்பு கிடைத்தது அங்கே எழுதிக் கொடுத்ததை மட்டும் தான் பேச வேண்டும் ஒரு வார்த்தை கூட மாற்றிப் பேச முடியாது அவ்வாறு மாற்றி பேசினால் இந்தியாவுக்கு ஏதாவது இடையூறு வந்துவிடும் என்று கருதி தான் அவ்வாறு சொல்வார்கள் அவ்வாறு எனக்கு எழுதி தரப்பட்ட உரையில்உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என பொருள் படும் வகையில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது அதனை மாற்றியாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ் மொழியில் சொல்ல வேண்டும்என அனுமதி பெற்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையோடு நின்று பேசினேன்.உலகின் மிகப்பெரிய தத்துவங்களை இரண்டு சொற்களில் சொன்ன பெருமை தமிழுக்கு உண்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் பேசியதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என உறவு முறை சொன்னதும், மெய்ப்பொருள் காண்பது அறிவு எனக் கூறியதும் தமிழ் மொழி தான் இந்த பெருமை மற்றவர் யாருக்கும் கிடைக்காது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், கற்றது கைமண்ணளவு கல்லாதது கடல் அளவு என்று சொன்னதும் தமிழர்கள் தான்.பெரும்பாலும் சரித்திரம் படைப்பவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாகத் தான் இருக்கிறார்கள்.மாளிகையின் உப்பரியிலே உளவியவர்கள் மட்டுமல்லஉறக்கம் வராமல் உண்ண உணவில்லாமல்அதன் காரணமாக சுருண்டு படுத்திருக்க கூடிய அவர்கள் தான் பல பேர் பசியை போக்கக்கூடிய தத்துவத்தை தந்திருக்கிறார் வழிகாட்டி இருக்கிறார்கள் காமராஜர் தான் இலவச கல்வி தந்தார் மதிய உணவு தந்தார்கள் கலைஞர் பள்ளி படிப்பை தாண்டாதவர் மாணவர்கள் இலவச பேருந்து தந்தார் பெரும் தலைவர்கள் செய்த கடமைகளைச் சொல்கிறேன்உரிமைத்தொகை இலவச பேருந்து பயணம் புதுமைப்பெண் தவப்புதல்வன் திட்டம் என பல திட்டங்களை தற்போதைய தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். சாதாரண ஒரு தனி மனிதன் இன்றைக்கு நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கி பல லட்சம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமை அல்ல அதில் 3000 ஆசிரியர்கள் பணியாற்றுகிறீர்கள் என்பது தான் சிறப்பு.வாழ்க்கை அதன் பாதையிலே போகிறது நாம் அதோடு போய் விட வேண்டும் எனநினைக்காமல் நாம் எதிர்த்துப் போக வேண்டும். நான் செத்த மீன் அல்ல உயிரோடு இருக்கிற மீன் அதுநீரை எதிர்த்து தான் பயணம் செய்யும்.சாக்ரடீஸ் சொன்ன தத்துவங்களை எல்லாம் எழுத்துகளாக வடித்து தந்தவர் அவருடைய மாணவர் பிளேட்டோ தான். அதனால்தான் 2500 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்னும் அவருடைய தத்துவங்கள் நாட்டில் நிலை பெற்றுக் கொண்டிருக்கிறதுதிரும்புகிற பக்கமெல்லாம் பேராசிரியர்களாக காட்சியளிக்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது வேலையல்ல ஒரு தொண்டு இருக்கிற பணிகளிலேயே மிகச்சிறந்தது மருத்துவப் பணி ஆசிரியப்ப பணி ஒரு மனிதன் கடவுளை நம்புவதற்கு அடுத்து நம்புவது ஆசிரியர்களை மருத்துவர்களை தான்.அதைப்போல்சீரழிந்து கொண்டிருக்கிற இளைய சமூகத்தை சீரமைத்து இந்த சமூகத்திற்கு மிகச் சிறந்த தலைமுறையை தருகிற பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.அவ்வாறு செய்வதன் மூலம் இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெரிய சேவை செய்கிறீர்கள் உங்களை நம்பித்தான் பெற்றோர்கள் படிக்க அனுப்புகிறார்கள் பெரும்பாலும் அவர்கள் விழித்திருக்கிற நேரத்தில் இருப்பது உங்களோடு தான் இன்றைய தலைமுறைகள் திசை தாருவதற்கு எத்தனையோ பாதைகள் இருக்கின்றன வளர்ந்து வருகிற செயற்கை நுண்ணறிவு.அதைப் படித்தால் வேலை கிடைக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்கிற பார்வை தான் இருக்கிறதே தவிர அதன் விளைவு பற்றி பெரும்பாலும் கவலைப் படுவதில்லை.தேவைக்கு மனிதன் கண்டுபிடித்த காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது வசதிக்கும் ஆடம்பரத்திற்கும் எப்பொழுது தேட ஆரம்பித்தானோ அப்போது தான் சிரிப்பு ஆரம்பித்தது நன்றாக யோசித்துப் பார்த்தால் உண்மை தெரியும் உணவுக்காக , உறைவிடத்திற்காக, பயணம் செய்ய என மனிதன் கண்டுபிடித்தான் செயற்கை நுண்ணறிவுஎன்பது ஒரு அறிவியல் வளர்ச்சி தான் ஆனால் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாவிட்டால் அது அழிவுக்கு கொண்டு விட்டு விடும் என்பதை நாம் உணர வேண்டும்.தேர்வுக்கு மட்டுமல்ல அவர்களை வாழ்க்கைக்கும் தயார்படுத்துகிற பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது ஒன்றும் மந்திரக்கோலை கையில் வைத்திருக்கவில்லை சமுதாயம் எப்படி இருக்கிறது? சமுதாயம் எங்கிருந்து உருவாகிறது யார் இதற்கு காரணம்கொஞ்ச நேரம் யோசியுங்கள் பெருங்குளம் பெற்றோர்கள் பிள்ளைகளை குறித்து இப்போது கவலைப்படுவதில்லைஇன்றைக்கு நாட்டில் மக்கள் தொகை அதிகம் மனிதர்கள் குறைவுஎல்லோரும் ஒரே வீட்டில் தான் வாழ்கிறோம் ஆனால் தனித்தனியாக வாழ்கிறோம் முன்பிருந்த நெருக்கம் சேர்ந்து உணவருந்தியது என எதுவும் இப்பொழுது இல்லை ஒருவருக்கொருவர் பேச்சு கூட இல்லாத நிலையில் குடும்பங்கள் இருக்கிறது.படிப்பு வேலை சம்பளம் என்கிற எண்ணத்தை மாற்றி இந்த உலகத்தை வழிநடத்த வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு இளைஞனுக்கு ஒரு பெண்ணுக்கோ ஏற்படுத்த முடிந்தது ஆசிரியர்களால் மட்டும்தான் இது ஆசிரியர் தினம் அல்ல ஆனால் நிறுவனர் தினம் ஒரு காலத்தில் மனிதனுடைய மனதை அச்சப்படுத்துவதற்காக நெறிமுறை படுத்துவதற்காக நேர்படுத்துவதற்காக கடவுளைக் காட்டினார்கள் மத நம்பிக்கையை ஊட்டினார்கள் தவறு செய்தாலும் உன்னை சாமி கண்ணை குத்தும் என்று பயமுறுத்தினார்கள் நீ இறந்ததற்கு பின்னால்என்னை கொப்பரையில் போட்டு வாட்டுவார்கள் என பயமுறுத்தினார்கள் பகுத்தறிவு வளர்ந்தது அறிவு வளர்ந்தது அந்த பயம் போனது வாழ்க்கைக்கு நெறி காட்டுகிறமனிதர்கள் என்று சில பேர் பின்னால் போனார்கள் இன்றைக்கு அவர்கள் தான் குழப்பத்திற்கு காரணமாக இருக்கிறார்கள்.45 ஆண்டுகளுக்குப் பின் பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஒரே தனிநபர் தீர்மானம் நான் கொண்டு வந்த திருமண நங்கைகளுக்கான தீர்மானம் தான் அதன் விளைவு தான்இன்று திருநங்கைகளில் பலர் நீதிபதிகளாக, விமான ஓட்டிகளாக அதிகாரிகளாக விளங்குகிறார்கள்இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் தெளிவாக தேர்ந்தெடுங்கள் உறுதியாக அதில் நில்லுங்கள்வெற்றி கிட்டும் கொஞ்சம் மாற்று யோசிங்கள் என்னால் முடியாது என்று தயவு செய்து எண்ணாதீர்கள்நான் வாழ்ந்தேன் என்பதற்கான அடையாளத்தை இந்த மண்ணில் விட்டு செல்வேன் என்ற விதையை ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் விதையுங்கள்.எதிர்காலத்தில் நீங்கள் உருவாக்கி இருக்கிற கல்லூரிக்கு மாநில அரசு உருவாக்கி இருக்கிற கல்லூரிக்கு அது கட்டி இருக்கிற கட்டிடத்திற்கு அவர்கள் சார்பாக பேராசிரியர்களுக்கு அவர்கள் வகுத்த பாடத்திட்டங்களுக்கு நெறிமுறை படுத்துகிற துணைவேந்தரை யாரோ தேர்ந்தெடுப்பார்கள் ஒரு நாள் கூட ஆசிரியர் பணியில் ஈடுபடாத ஒருவர் துணைவேந்தராக வரலாம் என்ற சீர்திருத்தங்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது உங்கள் உதவி பற்றிய தீர்மானிக்க உங்கள் துரைக்கே சம்பந்தம் இல்லாத ஒருவர் தலைவராக வருவார் என்ற திட்டத்தை சீர்திருத்தம் என்கிற பெயரால் அறிமுகப்படுத்துகிறார்கள் அதன் விளைவாக என்ன நடக்கப் போகிறதுஎன்பது தெரியுமாநீங்கள் படிக்கிற முதுகலை படிப்பாக இருந்தாலும் ஆராய்ச்சி படிப்பாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுப்பது ஒன்றாக இருக்கலாம் ஆனால் நெட் எழுதுகிற போது எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதை தேர்ந்தெடுத்தால் போதும் நீங்கள் ஆசிரியராக வருவீர்கள் என்ற அதிசயம் எல்லாம் நடக்கப் போகிறது.இதையெல்லாம் தாண்டி உங்கள் கரத்திலே ஒப்படைக்கப்பட்டு இருப்பது ஒரு வேலை அல்ல ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறை திறமை மிக்கது ஆற்றல்மிக்கது ஆனால் அதே நேரத்தில் கரை இல்லாமல் ஓடுகிற காற்றை போல் இருக்கிற இந்த தலைமுறையை வீட்டில் பெற்றோர்கள் செய்ய முடியாததை நீங்கள் தான் செய்ய வேண்டும்நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஊருக்கு உபதேசிக்க பிறந்தவன் அல்ல உங்களோடு சேர்ந்து உழைக்கப் பிறந்தவன் நமக்கெல்லாம் ஒரு கடமை இருக்கிறது அந்த கடமையின் இலக்கு என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும்செயற்கை நுண்ணறிவு நான் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதுஎன்பது தெரியாது ஆனால் நாம் என்ன எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம் ஒருவருடைய பிரைவைசிமுற்றிலுமாகசெயற்கை நுண்ணறிவால் பறிபோகும்ஏற்கனவே செல்லிடப்பேசி ஒற்றுமை பார்க்கிறது நமக்கு தெரியாமலே நம்மை படம் பிடிக்கும் நீதிபதி என்பவர் கையில் பேனா வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் இருந்தவர் என்பது மாறி இந்த கையில் பேசி வைத்திருப்பவர்கள் எல்லாம் நீதிபதியாக மாறி உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.நாட்டையும்சமுதாயத்தையும் அதன் எதிர்காலத்தையும்காக்கும் பெரும் பொறுப்பு உங்கள் இடத்தில் இருக்கிறது என்பதை வேண்டுகோளாக வைக்க வேண்டும்என்பதைக் கொண்டுதான் பேசத் தொடங்கினேன்நாளை இந்தியா என்பது தனித்துவம் உள்ள நாடு கலாச்சாரம் உண்டு நாகரிகம் உண்டு.நம் நாட்டில் வாழ்ந்தவர்களில் செண்பகராம் பிள்ளை என்பவர் ஒருவர் உலகை ஆட்டிப் படைத்த ஹிட்லரை எதிர்த்து பேசியவர் அவர் தன் வாழ்நாள் கடமையாக எண்ணியது சுதந்திர இந்தியாவில் தன்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது தனது சாம்பலாவுது சுதந்திர இந்தியாவுக்கு இந்திய கப்பலில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது 36 ஆண்டுகள் தவமிருந்து அதை காப்பாற்றிய லட்சுமி பாய் பேசப்படுவதில்லை வீரமங்கை வேலுநாச்சியார் பேசப்படுகிறார் ஆனால் அந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வெற்றிக்கு உழைத்த உயிர் துறந்த குயிலி பேசப்படுவதில்லை.சுப்பிரமணிய பாரதி வெற்றி பெற்ற கவிஞனாக திகழக் காரணம் அவன் கவிதைகளை தொகுத்து உலகுக்கு தந்ததுஅவரது மனைவி செல்லம்மாள் என்பது பலருக்கும் தெரிவதில்லை.தமிழ் தாய் வாழ்த்து பாடும்போது உடன் சேர்ந்து எல்லோரும் பாடுங்கள் தேசிய கீதம் பாடும்போதும் எல்லோரும் உடன் சேர்ந்து பாடுங்கள் தாய் மொழியை மதியுங்கள் தேசத்தின் பற்று கொள்ளுங்கள் இந்த தேசத்திற்காக உழைத்தவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடன் அதுதான்.இந்தக் கல்வி நிறுவனத்தில் நீங்கள் உருவாக்கித் தருகிற பிள்ளைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களாக இருக்க வேண்டும் அதனை நீங்கள் செய்து தாருங்கள் என உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story