திருச்சி விமான நிலையத்தில் ரூ. 42.81 லட்சம் தங்கம் மற்றும் ரூ. 8.45 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏா் ஏசியா விமானம் நேற்று வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். சோதனையில் பயணி ஒருவரின் ஜீன்ஸ் ஃபேன்ட், உள்ளாடையில் இருந்த பெல்ட் போன்ற பகுதியில் பசை வடிவில் ரூ. 42.81லட்சம் மதிப்பிலான 494 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினா், அந்த பயணியிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். அதேபோல் அதே விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவா், உரிய அனுமதியின்றி ரூ. 3,95,200 மதிப்பிலான 271 வெளிநாட்டுப் பணத்தாள்கள், ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் தாள்கள் என மொத்தம் ரூ. 8.45 லட்சம் பணத்தாள்களை உடைமைகளுக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அப்பெண் பயணியிடமிருந்து ரூ. 8.45 லட்சம் பணத்தாள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்
Next Story




