மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோயிலைச் சுற்றி ரூ.43 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி

மங்கலம்பேட்டை  மங்களநாயகி அம்மன் கோயிலைச் சுற்றி ரூ.43 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி
பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழிகாட்டுதலின் படி, விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டையில், 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மங்களநாயகி அம்மன் கோயிலைச் சுற்றி 120 மீட்டர் அளவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன், உதவி பொறியாளர் அன்புகுமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்றத் தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இதில், மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் செல்வம், துணைத் தலைவர் வழக்கறிஞர் பாரி இப்ராஹிம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ராமானுஜம், வேல்முருகன், தீபா, செல்வி, உமா, நூருல்லா, உமர்பாரூக், நசீமா பானு, தனலட்சுமி, கிருஷ்ணவேணி, மகாலட்சுமி, முஜிபுர் ரஹ்மான், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரங்கராமானுஜம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story