பல்லடத்தில் பணம் வைத்து சூதாடிய 43 பேர் கைது

X
பல்லடம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே செயல்படும் மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடு வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மனமகிழ் மன்றத்தை நடத்தி வந்த பிஜு என்கிற ஷாஜி (வயது 50) மற்றும் சக்திவேல், சரவணராஜ், பால சுப்பிரமணியன், தங்கராஜ் உள்பட 43 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், 31 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த மனமகிழ் மன்றத்தை தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

