ராமநாதபுரம் புதிய பாம்பன் ரயில்வே பணத்தை தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பாரத பிரதமர் வர உள்ளதையொட்டி தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் நிலையம் பாம்பன் பாலம் உள்ளிட்டவற்ற ஆய்வு செய்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வந்தது இந்த நிலையில் நூற்றாண்டை கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தில் ஏற்பட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது இதனை அடுத்து அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாம்பன் நடுக்கடலில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளது இதனை அடுத்து வருகின்ற 6ம் தேதி பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை அடுத்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அவர்கள் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையம், நிகழ்ச்சிக்கு நடைபெற உள்ள ஆலயம் பகுதி உள்ளிட்டவற்ற பார்வையிட உள்ளார். அதனை அடுத்து பாம்பன் சாலை பாலத்தில் மேடைகள் அமைக்கப்பட்டு பாரத பிரதமர் வருகை தந்து திறந்து வைப்பது போன்று டொமொகளும் நடத்தப்பட உள்ளனர். .
Next Story