ஆ.ராசா ஆய்வு
முதலமைச்சர் வருகையை ஒட்டி ராசா ஆய்வு
அடுத்த மாதம் ஏப்ரல் 5 மற்று 6 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை புரிவது ஒட்டி மேடை அமைக்கும் இடத்தினை இன்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 460 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 5 மற்றும் 6ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். இந்நிலையில் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதனைத் முன்னிட்டு இன்று உதகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா மற்றும் அரசு தலைமை கொறடா கா . ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story