குமாரபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; இருவர் படுகாயம்!!

குமாரபாளையத்தில்  ஆட்டோ கவிழ்ந்து விபத்து; இருவர் படுகாயம்!!
X
குமாரபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில், இருவர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் மோகன்ராஜ், 30. விசைத்தறி கூலி. இவர் மார்ச்.23ல் சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை பஸ் நிறுத்தம் பகுதியில் ஷேர் ஆட்டோவில் ஏறி பின்புறம் அமர்ந்து கொண்டிருக்க, ஆட்டோ ஓட்டுனர் துரைராஜ், 35, வேகமாக ஆட்டோவை ஒட்டி சென்றதால், நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து மோகன்ராஜ் மனைவி, கோகிலா, 24, குமாரபாளையம் போலீசில் நேற்று புகார் கொடுக்க, போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story