பெரிய கசிநாயக்கன்பட்டியில் 44 ஆண்டு எருது விடும் விழா
Tirupathur King 24x7 |18 Jan 2025 10:07 AM GMT
பெரிய கசிநாயக்கன்பட்டியில் 44 ஆண்டு எருது விடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய கசினாயக்கன்பட்டி கிராமத்தில் 42 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்தவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்து ஓடின! 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 42 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் எருது விடும் விழா அதி விமர்சையாக நடைபெற்றது இந்த எருது விடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்ரேயாகுப்த்தா விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்றனர் தமிழக பாரம்பரிய விழாவான எருது விடும் விழாவினை சிறப்பான முறையில் கொண்டாடுவோம் என்றும் நமது கலாச்சாரத்தையும் பேணி காப்போம் என்றும் காளைகளை நம் வாழ்வோடு இணைந்தவை என்பதை அறிவோம் என்றும் அவைகளை கண் போல் பாதுகாப்போம் என்றும் விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித தீங்ககும் விளைவிக்க மாட்டோம் என்றும் அரசு வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விழாவினை எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி நடத்துவோம் என்றும் உறுதிமொழிகிறோம் என்கிற எருது விடும் விழா உறுதிமொழியை ஏற்றனர் பின்னர் ஆட்சியர் கூறுகையில் காளைகள் ஓடும் வழித்தடத்தில் யாவரும் நிற்க வேண்டாம் என்றும் இவ்விழாவில் எந்த ஒரு நபருக்கும் சிறு காயம் கூட ஏற்படாதவாறு இந்த எருது விடும் திருவிழாவை நடத்தப்பட வேண்டும் என்றும் விழா குழுவினர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் மேலும் இவ்விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் ஆட்சியர் எருது விடும் விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த எருது விடும் விழாவில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் கால் நடை மருத்துவரால் பரிசோதனைக்கு உட்பட்ட காளைகளை மட்டும் விழாவில் அனுமதிக்கப்பட்டது இந்த எருது விடும் விழாவில் திருப்பத்தூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுப்பட்டனர் இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் ஆம்பூர் வாணியம்பாடி மற்றும் கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின மேலும் குறைந்த நொடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 55,555 ரூபாயும் இரண்டாவது பரிசாக 50,555 ரூபாயும், மூன்றாவது பரிசாக 40555ரூபாய் என மொத்தம் 36 பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கண்டு களித்தனர் இந்த எருது விடும் விழாவில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் கார்த்தி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் துறை மருத்துவ துறை, ,தீயணைப்பு துறை, கால்நடை மருத்துவர் பிரவின் மற்றும் முரளி மருத்துவ துறை, மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ், கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ் அதிமுக அம்மா பேரவை தலைவர் ஆறுமுகம் ஊர் கவுண்டர் பூபதி மற்றும் விழா குழுவினர் பட்டு நடராஜன் அம்மன் புறம் பூபதி தொழிலதிபர் வக்கீல் ஐயர் தோப்பு kஜெய்சங்கர் கே டி கோவிந்தராஜ் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story