விபத்து இழப்பீட்டு தொகையாக இரண்டு கோடியே, 44 லட்சத்து, 95 ஆயிரம் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு

X
Komarapalayam King 24x7 |27 Dec 2024 8:56 PM ISTஇரண்டு கோடியே, 44 லட்சத்து, 95 ஆயிரம் வழங்க குமாரபாளையத்தை சேர்ந்தவருக்கு விபத்து இழப்பீட்டு தொகையாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் தெருவில் வசித்து வந்தவர் சரவணன், 44. துபாயில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரும், இவரது மகள் பிரியதர்சினி,8, நண்பர்கள் முருகன் (எ) சுப்ரமணி, 43, வெங்கடேசன்,44 இவரது மகன் அர்சித்,12, ஆகியோர் மாருதி ஸ்விப்ட் காரில் சபரிமலை செல்ல வேண்டி, வெங்கடேசன் காரை ஓட்ட, 2017, டிச. 23ல் திருச்செங்கோடு, வேலூர் சாலையில் சித்தளந்தூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, அதே சாலையில் எதிர் திசையில் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஓட்டுனர், இவர்கள் வந்த கார் மீது மோதியதில், சரவணன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சரவணன் இறந்ததற்கு இழப்பீடு கோரி, அவரது மனைவி கவுசல்யா, மகள் பிரியதர்சினி சார்பில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் விசாரணை முடிவு பெற்று, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மனுதாரர்களுக்கு விபத்து இழப்பீட்டு தொகையாக இரண்டு கோடியே, 44 லட்சத்து, 95 ஆயிரம் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை குமாரபாளையம் வழக்கறிஞர் ஐயப்பன் தாக்கல் செய்து, வாதாடி நிவாரண தொகை உத்திரவை பெற்றுக்கொடுத்தார்.
Next Story
