மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் 45 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

X
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் 45 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக கல்லூரி முதல்வர் முனைவர் செ. ராஜு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு கல்லூரியின் தலைவர் திரு எஸ். ஜெயராமன் மற்றும் செயலாளர் திரு ஆர்.வி. என். கண்ணன் அவர்களும் தலைமை வகித்தனர். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திரு க. ப. நவநீதகிருஷ்ணன் முன்னாள் செயலாளர் மற்றும் தாளாளர் யாதவர் கல்லூரி, நிறுவனர் பார்க் பிளாசா குழுமம் மதுரை மற்றும் சென்னை அவர்கள் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் 801 மாணவர்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர். இந்நிகழ்வில் யாதவர் கல்லூரியின் கல்வி நிதி செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ராஜு அவர்கள் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு உறுதிமொழியைக் கூறினார்.மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின் கல்லூரி முதல்வர் அவர்கள் விழாவின் ஏற்புறையைக் கூறிட விழா இனிதே நிறைவடைந்தது.
Next Story

