தவிட்டுப்பாளையத்தில் 45-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு நிறைவு விழா நடைபெற்றது.

தவிட்டுப்பாளையத்தில் 45-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு நிறைவு விழா நடைபெற்றது.
தவிட்டுப்பாளையத்தில் 45-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு நிறைவு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா நந்சை புகலூர் ஊராட்சியில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் தவிகை நண்பர்கள் மற்றும் விநாயகர் பாய்ஸ் குழுவினர் 45 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று இரவு பொங்கல் விழா இறுதி நிகழ்ச்சியில் பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு ஆடல், பாடல், கபடி என பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி அமர்க்களம் செய்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story