பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 45 ஆவது ஆண்டு விழா: நலத்திட்ட உதவி வழங்கல்..

பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 45 ஆவது ஆண்டு விழா: நலத்திட்ட உதவி வழங்கல்..
X
பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 45 ஆவது ஆண்டு விழா: நலத்திட்ட உதவி வழங்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 45 ஆவது ஆண்டு விழா பூக்கடை வீதி உள்ள அபிராமி மேட்சிங் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்J.P.@ ஜெயபிரகாஷ் அவர்களின் ஆலோசனை வழிகாட்டுதல் பெயரில் மாவட்ட பொருளாளர் மணி@ S. மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வரவேற்புரையாக நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் A.ராஜு" அவர்கள் முன்னிலையில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் MSA. சிவானந்தம். நகர துணைச் செயலாளர்கள் ரமேஷ், பொன், பாலச்சந்தர், சேகர்,நம்மவர் தொழிற்சங்க பேரவையின் உறுப்பினர் ஹீரோ பூபதி, மற்றும் ஒன்றிய செயலாளர் ராஜா, ராசிபுரம் சண்முகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர் . மேலும் 45 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கும், மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் இலவச ஆடைகள், வழங்கி சிறப்பு செய்தார்கள்.அதில் முதியோர்களுக்கு "இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கி வாழ்த்துக்கள் பெற்றனர். அனைவருக்கும் இனிப்புகள், கேக்குகள், வழங்கி சிறப்பாக ஏற்பாடு செய்தனர். குறிப்பாக "விண்வெளி நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன்" அவர்கள் "நாடாளுமன்ற"மேல் சபை" உறுப்பினராக பதவி ஏற்க" உள்ள அவர்களுக்கு "வாழ்த்தி வணங்கி சிறப்புரை ஆற்றினர். முடிவில் பூபதி அவர்கள் நன்றி உரையாற்றினார்.
Next Story