ஒட்டங்காடு,  இடையாத்தியில் தலா ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா 

அடிக்கல் நாட்டு விழா 
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரு இடங்களில் துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டங்காடு மற்றும் இடையாத்தி ஆகிய இரு இடங்களில் தலா ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடையாத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள், உபகரணங்களை அரசின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.  இதில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாக்கண்ணு, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், ஆரோ.அருள், அந்தோணி, மருத்துவ அலுவலர் பொன்.அறிவானந்தம், ஒன்றியப் பொறியாளர் பாரதிதாசன் மற்றும் இடையாத்தி கிளைச் செயலாளர்கள் ஜானகிராமன், ரவி, உடையப்பன், ரமேஷ், இளைஞர் அணி சத்தியமூர்த்தி, வீரியங்கோட்டை சுரேஷ் கிராம பெரியவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வீடு பாதிக்கப்பட்டவருக்கு உதவி அதனைத் தொடர்ந்து புனல்வாசல் அருகே ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மழையால் வீடு சேதமடைந்த தங்கவேல் என்பவர் மனைவி ரெங்கநாயகி என்பவருக்கு ரூ.5 ஆயிரம் தனது சொந்தப் பணத்தில் இருந்து நிவாரண உதவி வழங்கினார்.  அப்போது புனல்வாசல் வேம்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story