தொண்டாமுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் !

X
கோவை மாவட்டம் பேரூர் பகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே சமுதாயக் கூடத்துக்கு எதிரே உள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ஜெப்ராஜ் (62) மற்றும் விநியோகித்த குபேந்திரன் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
Next Story

