கோவையில் ரூ.4.5 கோடியில் புதிய பதிவுத்துறை அலுவலகம் திறப்பு !
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட கோவை வடக்கு ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை நேற்று தமிழக அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். கடந்த ஆண்டு கோவை மாவட்டம், பதிவு சேவைகள் அதிகம் நடக்கும் காரணத்தால், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதன்படி வடக்கு பகுதிக்கான புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டிடம் பூர்த்தியாகி திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலெக்டர் பவன்குமார் தலைமை வகிக்க, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதிஷ், பதிவுத்துறை தலைவர் பொன்ராஜ் ஆலிவர், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story



