கரூரில் நடந்த துயர சம்பவம்- காயமடைந்த 45 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 -1,00,000- காசோலைகளை வழங்கிய செந்தில் பாலாஜி.
கரூரில் நடந்த துயர சம்பவம்- காயமடைந்த 45 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 -1,00,000- காசோலைகளை வழங்கிய செந்தில் பாலாஜி. கரூரில் கடந்த மாதம் 27 - ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழக முதல்வர் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார். இதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட நபர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து செந்தில் பாலாஜி காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story





