சங்கரன்கோவில் இருந்து 450 பேர் காசி, அயோத்திகளுக்கு யாத்திரை பயணம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து சைவ சித்தாந்த பேரவை சார்பில் மாரியப்பன் தலைமையில் குழந்தைகள் உட்பட சுமார் 450 பேர் காசி, அயோத்தி உள்ளிட்ட பல வடமாநில ஆலயங்களுக்கு 10 நாள் யாத்திரை சென்றனர். மேலும் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் 400-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து சென்றனர். மேலும் உறவினர்கள் ஏராளமானோர் அனுப்பி வைக்க வந்த நிலையில் ரயில் நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் வழக்கமாக ரயில் இரண்டு நிமிடங்களில் நின்ற பின்னர் செல்வது வழக்கம் ஆனால் இன்று பத்து நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் ஏறிய பின்னர் இயக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் இருந்து கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 400க்கும் மேற்பட்டோர் காசி, அயோத்தி உள்ளிட்ட சிவாலயங்களுக்கு யாத்திரை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
Next Story

