திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவில் 450 ஆண்டு காலமாக அர்த்தநாரீஸ்வரர் நகர் வலம் வந்த தேருக்கு ஓய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவில் 450 ஆண்டு காலமாக அர்த்தநாரீஸ்வரர் நகர் வலம் வந்த தேருக்கு ஓய்வு கொடுக்கப் பட்டது. இந்த ஆண்டு முதல் 2 கோடியே 17 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள புதிய தேரில் அர்த்தநாரீஸ்வரர் நகர் வலம் வர உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உலகப் புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்கின்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆண் பாதி பெண் பாதி உருவமாக அருள்பாலித்து வருகிறார். உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் வைகாசி விசாக தேர் திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. சுமார் 450 ஆண்டுகளாக மைசூர் மகாராஜா ஒருவர் செய்து கொடுத்த தேரில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி தேருக்கு எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்த தேரில் மர அச்சு இரும்பு அச்சாக மாற்றப்பட்டு மரச் சக்கரங்களுக்கு பதிலாக இரும்புசக்கரங்கள் அமைக்கப்பட்டு வளம் வந்து கொண்டிருந்த நிலையில் தேர் மிகவும் பழமை அடைந்து விட்ட காரணத்தால் புதிய தேர் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு 2 கோடியே 17 லட்சம் மதிப்பிலான புதிய தேரை அமைக்க அனுமதி அளித்திருந்தது. தற்போதுபுதிய தேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 25ஆம் தேதி புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆண்டு முதல்வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் புதிய தேர் இயக்கப்படும். எனவே பழைய தேருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.ஆனாலும் பழமை வாய்ந்த இந்த தேரை எதிர்கால சந்ததியினரும் கண்டு வணங்கி மகிழும் வகையில் பழைய தேருக்கு பூஜைகள் மகா தீபாரதனைகள் காட்டப்பட்டு ஜேசிபி, கிரேன், டிராக்டர்கள் உதவியுடன் பழைய தேர் நின்றிருந்த இடத்திற்கு அருகாமையில் தனி இடம் ஒதுக்கப்பட்டு நிலை நிறுத்தப் பட்டுள்ளது. பழைய தேருக்கு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து அறநிலையத்துறை இணை ஆணையர்கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிவாச்சாரியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அரோகரா கோஷங்கள் முழங்கபழைய தேரை பக்தர்கள் வழிபட்டனர்
Next Story