காங்கேயத்தில் அரசு பள்ளிக்கு நிதி திரட்டும் முயற்சியில் 4500 பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி அமைச்சர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதில் 4500 பேர் கலந்து கொண்டனர். காங்கேயம் அரசு மேல்நிலை பள்ளிக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் க்ரிஷ் அசோக் ஆகியோர் தொடங்கி வைத்தார்
காங்கேயம் கரூர் சாலை தனியார் திருமண மண்டபத்தில் இருந்து மாரத்தான் போட்டிகள் துவங்கியது. காங்கேயம் அரசு மேல்நிலை பள்ளிக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.காங்கேயம் ரன்னர்ஸ் மற்றும் காங்கேயம் டவுன் ரோட்டரி இணைந்து நடத்தும் 4ம் ஆண்டு மிக பிரமாண்டமான போட்டியானது காலை மாலை 5.30 மணி அளவில் தொடங்கியது. இந்த மாரத்தான் போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் க்ரிஷ் அசோக் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். காலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்,பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சிறு வயது போட்டியாளர்கள் முதல் முதியோர்கள் வரை ஆர்வமிகுந்த அனைவரும் கலந்து கொண்டு மாரத்தான் பந்தயத்தில் போட்டியிட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுச் சென்றனர். 5 கிலோ மீட்டர்(வேடிக்கை ஓட்டம்),5 கிலோ மீட்டர் ( நேர ஓட்டம்),10 கிலோ மீட்டர்,21 கிலோமீட்டர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சுமார் ரூ. 4 லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் பந்தய தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கின்றனர் என்பதை கணக்கிட அவர்களுக்கு வழங்கப்பட்ட பேட்ஜில் சிப் பொருத்தப்பட்டு துல்லியமாக கணக்கிட படுவதாகவும் மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கின்றனர். காலை 5.30 மணி முதல் காங்கேயம் நகர் பகுதிகள் விழாக்கோலமாக காட்சியளித்தது.பாதுகாப்பு பணிகளில் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புட் மற்றும் காங்கேயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். காங்கேயம் நகர முழுவதும் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் போட்டியாளர்களை வழிநெடுகிலும் உற்சாகப்படுத்தினர்.
Next Story





