ராசிபுரத்தில் திக பொதுக்கூட்டம் திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு: பெரியார் உலகம் நிதியாக திக தலைவர் கி.வீரமணியிடம், ரூ.4.51 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

X
Rasipuram King 24x7 |18 Dec 2025 7:28 PM ISTராசிபுரத்தில் திக பொதுக்கூட்டம் திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு: பெரியார் உலகம் நிதியாக திக தலைவர் கி.வீரமணியிடம், ரூ.4.51 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
ராசிபுரத்தில் திக பொதுக்கூட்டம் திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு: பெரியார் உலகம் நிதியாக திக தலைவர் கி.வீரமணியிடம், ரூ.4.51 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இதுதான் ஆர் எஸ் எஸ் - பாஜக ஆட்சி; இதுதான் - திராவிடம் திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் உலகம் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட திக செயலாளர் வை.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கணேசன் வரவேற்புரையாற்றினார். இதில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், திராவிடர் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், பேசும்போது பெரியாரின் கொள்கைகளை சிறப்பாக இன்று வரை கடைப்பிடித்து அவரின் புகழை தொடர்ந்து எடுத்து கூறி வரும் தலைவர் கே வீரமணி அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பெரியார் அண்ணா கலைஞர் போன்ற நல்வழியில் தற்போது தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். பொதுமக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை விரைவில் அவர் தீர்த்து வருகிறார். ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் தண்ணீர் பிரச்சனை தீர்க்க ரூ.854 கோடி ஒதுக்கி பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகள் ஒன்றான தண்ணீர் பிரச்சனையை தற்போது தீர்த்து வைத்துள்ளார். இதே போல பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பல நல்ல திட்டங்களை வகுத்து அரசு அதிகாரிகளிடம் விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அனைவரிடத்திலும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான செயலை வெளிப்படுத்தி வருகிறார் நமது தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் என எடுத்து கூறினார். இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் உண்மையான திராவிடம் எது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் வகையில் இன்று திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குஜராத் விழாவில் கூட அரசு நிகழ்ச்சிகள் இன்று மு க ஸ்டாலின் அவர்களை பற்றி பேசும் அளவிற்கு இன்று திமுக வளர்ந்துள்ளது .அந்த அளவிற்கு திமுக மேல் பாஜக அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு சம உரிமை அளித்து பெரியார் அவர்கள் எப்படி சிறப்பானதொரு நல்வழி காட்டினாரோ அதே வேளையில் கலைஞர் தொடர்ந்து ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என பேசினார். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தை திக செயலாளர் வை.பெரியசாமி பெரியார் உலகம் நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார். மேலும், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ. 4.51 ஆயிரம் ரூபாய்காண காசோலையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் திராவிடர் கழகத்தினர் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியிடம் வழங்கினர். இந்த பொதுக்கூட்டத்தில், ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர். சங்கர், ராசிபுரம் நகராட்சி நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நாமக்கல் மாவட்ட சிபிஐ(எம்) செயலாளர் கந்தசாமி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாச்சல் எ.சீனிவாசன், ராசிபுரம் காங்கிரஸ் நகர தலைவர் எஸ். ஆர்.முரளி, நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் கு.அன்பழகன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
Next Story
