ரகோத்தமர் சுவாமிகளின் 452வது ஆராதனை விழா

ரகோத்தமர் சுவாமிகளின் 452வது ஆராதனை விழா
விழா
திருக்கோவிலுார், மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 452 வது ஆராதனை விழா இன்று துவங்குகிறது. பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ளது.இவரது 452 வது ஆண்டு ஆராதனை விழா இன்று அதிகாலை 5:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகத்துடன் துவங்குகிறது. 8:30 மணிக்கு உத்திராதி மடத்தின் குருஜி சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் தலைமையில் சன்னிதானங்களில் சிறப்பு பூஜை, 11:00 மணிக்கு அதிஷ்டத்தில் பஞ்சாமிர்தாபிஷேகம், மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7:30 மணிக்கு அகண்ட பாகவத பிரவசனம், 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5:00 மணிக்கு மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், 7:00 மணிக்கு அதிர்ஷ்டமானம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 8:30 மணிக்கு அதிர்ஷ்டத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் 10:00 மணிக்கு மூலராமர் பூஜை, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத வழங்கப்படுகிறது.
Next Story