ஆன்லைனில் ரூ.46 லட்சத்தை இழந்த முதியவர்
Sivagangai King 24x7 |26 Dec 2024 6:27 AM GMT
காரைக்குடியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரிடம் ரூ.46 லட்சத்தை ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் மோசடி செய்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலையை சேர்ந்தவர் சுந்தரம்(81). இவர் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் முதியவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி கறுப்பு பணத்தை பரிவர்த்தனை செய்ததாக சிபிஐயில் புகார் உள்ளது என கூறியுள்ளார். அது தொடர்பாக சிபிஐ அதிகாரி ஒருவர் வீடியோ காலில் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார். மறுநாள் வீடியோ காலில் பேசியவர் தான் சிபிஐ அதிகாரி என்றும் உங்கள் மீது சிபிஐயில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு அவர்கள் அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யும் படி நீதிமன்ற உத்தரவு உள்ளது என்று கூறி உத்தரவு நகல் ஒன்றை காண்பித்துள்ளனர். இதை நம்பிய முதியவர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ.46 லட்சத்து 7,741ஐ அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் தான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த சுந்தரம் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் சுந்தரம் அளித்த புகாரி அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Next Story