தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.46 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த ஏப்ரல் முதல் நடப்பு மார்ச் மாதம் வரை 46 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் வாங்க தர்மபுரி நகரம், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதர்மபுரி உழவர் சந்தையில் மாலை நேரத்திலும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 124 கடைகள் உள்ளன. தினமும் 124 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். தினமும் சுமார் 33 டன் காய்கறிகள் விற்பனை ஆகிறது. 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை வாடிக்கையா ளர்கள் வருகிறார்கள். தீபாவளி, பொங்கல் மற்றும் புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் சுமார் 50 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. கடந்த ஒரு ஆண்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு ஆண் டில் தர்மபுரி உழவர் சந்தயில் மொத்தம் 11 ஆயிரத்து 564 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளது. இத இதன்மதிப்பு ரூ.46கோடியே 2 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.இந்த உழவர் சந்தையில் கூடுதல் கடைகளை திறக்க வும், அடிப்படைத் தேவை களை மேம்படுத்தவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் இன்று தெரிவித்துள்ளார்.
Next Story