பேராவூரணியில் தஞ்சை பல்நோக்கு சமூக சேவை மையம் சார்பில் ஏழை மாணவிகள் 46 பேருக்கு இலவச மிதிவண்டி எம்எல்ஏ நா.அசோக்குமார் வழங்கினார்

பேராவூரணியில் தஞ்சை பல்நோக்கு சமூக சேவை மையம் சார்பில் ஏழை மாணவிகள் 46 பேருக்கு இலவச மிதிவண்டி எம்எல்ஏ நா.அசோக்குமார் வழங்கினார்
X
சைக்கிள்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி நடேச குணசேகரன் திருமண மண்டபத்தில், தஞ்சாவூர் பல்நோக்கு சமூக சேவை மையம் சார்பில் ஏழை மாணவிகள் 46 பேருக்கு மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.  இண்டர் லைஃப் ஆன்லஸ் என்ற இத்தாலி நாட்டு நிறுவனத்தோடு, சமூக சேவை நிறுவனங்கள் இணைந்து, தஞ்சை பல்நோக்கு சமூக சேவை மைய செயலாளர் அருட்திரு ஆர்.குழந்தைசாமி அடிகளார் ஏற்பாட்டில், மணக்காடு, மேலப்பூவாணம், வெளிவயல், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, புனல்வாசல் ஆகிய ஊர்களின் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படித்து வரும் ஏழை, எளிய மாணவியர்கள் 46 பேருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.  தஞ்சை பல்நோக்கு சமூக சேவை மைய இயக்குனர் அருட்திரு ஏரோமியாஸ் தமஸ்கு அடிகளார் தலைமையில், ஆதனூர் பங்கு தந்தை அருட்திரு ஆரோக்கியசாமிதுரை அடிகளார் முன்னிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.   நிகழ்ச்சியில், புனல்வாசல் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிமேரி, பல்நோக்கு சமூக சேவை மைய பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இலவச மிதிவண்டிகளை பெற்றுக் கொண்ட மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story