திருப்பத்தூர் மாவட்டத்தில் 460 மகளிர் குழுக்களுக்கு 45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன்
Tirupathur King 24x7 |9 Sep 2024 9:39 AM GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் 460 மகளிர் குழுக்களை சேர்ந்த 6280 பயனாளிகளுக்கு 45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 460 மகளிர் குழுக்களை சேர்ந்த 6280 பயனாளிகளுக்கு 45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மதுரை மாவட்டத்தில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதய நிதிஸ்டாலின் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைத்தார் இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 460 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6280 பயனாளிகளுக்கு ரூபாய் 45.91 கோடி மதிப்புள்ளான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என்.அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு வழங்கினார் மாவட்ட ஊரக பகுதிகளில் 6.ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 294 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 32.57.கோடி நேரடி வங்கி கடன் மாவட்ட நகர்புற பகுதிகளில் உள்ள 116 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10.63 வங்கி நேரடி கடன் வழங்கப்பட்டது அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் தமிழகத்தில் முதல் முதலில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு சுய உதவி குழுக்கள் மூலமாக வங்கி கடன் வழங்கப்பட்டது பின்னர் படிப்படியாக இந்தியா முழுவதும் பெண்களுக்கு சுய உதவி குழு மூலமாக வங்கி கடன் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்நிலையில் கடந்த பத்து ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் பெகளுக்கு எந்த ஒரு நலதிட்டங்களும் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க வில்லை மீண்டும் நம்ப நல்லாட்சியில் பெண்களுக்கு வங்கி கடன் மாற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றது இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உமா மகேஸ்வரி .மற்றும் திட்ட இயக்குநர். தனபதி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்லவனாதன் மற்றும் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிருவாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது
Next Story