வட்டார அளவிலான கபடி போட்டி சேர்மன் துவக்கம்

வட்டார அளவிலான கபாடி போட்டி சேர்மன் துக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார அளவிலானஅரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் கபடி போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்றது. போட்டிகளை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டியில் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள திருச்செங்கோடு கோழிகால்நத்தம் குமரமங்கலம் தேவனாங்குறிச்சி சித்தளந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 34 அணிகளாக போட்டிகளில் பங்கேற்றனர். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை சக விளையாட்டு வீரர்கள் சுற்றியும் நின்று கைதட்டி உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்து விளையாட்டு வீரர்களை உற்சாகப் படுத்தினார்கள். இன்றும் நாளையும் நடத்தப்படும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.நிகழ்ச்சியில் திருச்செங் கோடு உடற்கல்வி இயக்குனர் சுதந்திரா தேவி, மலர்மெட்ரிக் பள்ளி இயக்குனர் மூர்த்தி, மகளிர்மேல்நிலைபள்ளி உடற்கல்வி ஆசிரியை தீபா, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஊடக கல்வி ஆசிரியர்கள் கார்த்தி, உமா சந்தர், எம் டி வி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகேசன், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story