உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, சேந்தமங்கலம், மல்லசமுத்திரம் மற்றும் வெண்ணந்தூர் வட்டாரங்களில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், மல்லசமுத்திரம் மற்றும் வெண்ணந்தூர் வட்டாரங்களில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சியர் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலையில், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 30.09.2025 வரை 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி இன்றைய தினம் நாமக்கல் மாநகராட்சியில் அய்யம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, சேந்தமங்கலம் பேரூராட்சியில் வசந்தா மஹால் திருமண மண்டபம், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் ராமாபுரம் ஆர்.பி.ஆர் மண்டபம், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் வெப்படை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பரமத்தி வட்டாரத்தில் ம.கந்தம்பாளையம் சமுத்திரபாளையத்தார் திருமணம் மண்டபம், வெண்ணந்தூர் வட்டாரத்தில் ஓ சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சேந்தமங்கலம் பேரூராட்சி வசந்தா மஹால் திருமண மண்டபம், மல்லசமுத்திரம் வட்டாரம் ராமாபுரம் ஆர்.பி.ஆர் மண்டபம் மற்றும் வெண்ணந்தூர் வட்டாரம் ஓ சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story
