நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களின் வண்ணங்கள் தினம் கொண்டாட்டம்.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில்  மழலையர் வகுப்பு மாணவர்களின்  வண்ணங்கள் தினம்  கொண்டாட்டம்.
X

School

தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் புதன் கிழமை சர்வதேச வண்ண தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியில் பயிலும் கே.ஜி. குழந்தைச்செல்வங்கள் இன்று சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ். ஊதா, என தனித்தனியாக வண்ண வண்ண ஆடைகளை அணிந்து வந்தனர். காலையில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் வண்ணங்களைப் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியும் தனித்தனியாகப் பேசினார்கள். செயலாளர் தனபால் அவர்களும், பொருளாளர் கா. தேனருவி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வண்ணங்கள் தின வாழ்த்துகளை கூறினார்கள். வானவில்லைப் போல அழகாக வீற்றிருக்கும் மழலை செல்வங்களை பார்க்கும் போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. நிறங்களின் தன்மை, நிறங்களினால் அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி குழந்தைச் செல்வங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச வண்ண தினம் கொண்டாடப்படுகிறது என்று பள்ளியின் பொருளாளர் திரு. கா தேனருவி அவர்கள் கூறினார். மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களைக் கூறினார்;. பள்ளியின் செயலாளார் , பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் குழந்தைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாலை 3.00 மணியளவில் வானவில்லில் தோன்றும் அனைத்து வண்ணங்களையும் நினைவுபடுத்தும் விதமாக கே.ஜி மாணவர்கள் சுயடடல பயணம் சென்று அனைவருக்கும் வண்ண தினத்தின் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story