நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியவை.
நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 86 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என 746 இனிப்பு சங்கருடன் செயல்பட்டு வருகிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடப்பாண்டில் பயிர் கடன்கள் மட்டும் சுமார் 625 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும் மேலும் நகைக்கடன் மகளிர் சுய உதவி குழு மாற்றுத்திறனாளி கடன் தாட்கோ திட்டத்தின் கீழ் பல எண்ணற்ற கடன் பெறும் வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.. மேலும் இந்தியாவில் 351 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி இயங்கி வந்த நிலையில் தற்போது 352 வது இடமாகவும், தமிழ்நாட்டில் 24 ஆவது வங்கியாகவும் நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை தொடங்கி வைக்கிறார்.
Next Story