கோவை: குறைதீர்க்கும் முகாம்- 47 மனுக்களில் 45-க்கு தீர்வு !

X
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 47 மனுக்களில் 45 மனுக்களுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2 மனுக்கள் மேல் விசாரணைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் இந்த முகாமிற்கு, மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார். குடும்பப் பிரச்சினைகள், பணப் பரிமாற்றம் தொடர்பான சிக்கல்கள், இடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்கள் இந்த முகாமில் பெறப்பட்டன. இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவினர்.
Next Story

