உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து உயர்கல்வி பயில வைக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.

உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து  உயர்கல்வி பயில வைக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
X
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தில் உயர்கல்வியில் சேராத 954 மாணவ, மாணவியர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உயர்கல்வி பயில வைக்க வேண்டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கு உத்தரவு.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் உயர்வுக்குப்படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம், உயர்கல்வியில் சேராத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'உயர்வுக்குப்படி 2025' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது, முதற்கட்டமாக நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு கடந்த 22.08.2025 அன்று நடைபெற்றது. இதில் 138 மாணவர்கள் கலந்து கொண்டு 49 மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியில் பயில உடனடி சேர்க்கை பெற்று பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வருகின்ற 28.08.2025 அன்று திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத மாணவ-மாணவியர்கள், கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 25.08.2025 அன்று உயர்வுக்குபடி வழிகாட்டுதல் முகாம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உயர்கல்வியில் சேராத 954 மாணவ, மாணவியர்களை கண்டறிந்து அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயர்கல்வியில் சேர்ந்து பயில்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் எலச்சிபாளையம் ஒன்றியம் சக்கராம்பாளையத்தைச் சேர்ந்த சேகர், அமுதா அவர்களின் மகள் செல்வி.சே.சுபிதா மற்றும் அகரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராணி அவர்களின் மகள் செல்வி ரா.கோமதி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, உயர்கல்வியின் அவசியம், மேலும் உயர்கல்வி பயிலுவதால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய முன்னேற்றம் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், 28.08.2025 அன்று திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத மாணவ-மாணவிகளுக்கு திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ள கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பான பாடப்பிரிவில் சேர்ந்து உயர்கல்வி பயில வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக, திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தில் இன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உயர்கல்வியில் சேராத மாணவர்களின் வீட்டிற்கே சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 28.08.2025 அன்று நடைபெற உள்ள உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று உயர்கல்வியில் சேர்ந்து பயில அறிவுரைகள் வழங்கினார்கள். இவ்விழிப்புணர்வு பணியினை முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பரமேஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) புவனேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் புருசோத்தமன் (இடைநிலை), ஜோதி (தனியார் பள்ளி) உட்பட பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்டனர்.
Next Story