உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் வட்டாரம் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் வட்டாரம் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சியில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் , பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், கடந்த 15.07.2025 முதல் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் 30.09.2025 வரை நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் நகர்ப்புறபகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் வட்டாரம் இரங்கப்பநாயக்கன்பாளையம் சமுதாய கூடம் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி ராஜவாய்க்கால் தெரு வி.எஸ்.எஸ் மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடி தீர்வாக ஒரு பயனாளிக்கு வருமானச் சான்றிதழை வழங்கினார். இந்த ஆய்வின்போது துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Next Story
