கோவை: ஆவணமின்றி கடத்தப்பட்ட ரூ.48 லட்சம் பணம் பறிமுதல் !

X
பாலக்காடு அருகே கோவை–கொச்சி நெடுஞ்சாலையில் நேற்று இரவு கலால் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், தனியார் பேருந்தில் பயணம் செய்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணேஷ் அசோக் யாதவ் என்பவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாமல் ரூ.48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த பணம் பெங்களூரிலிருந்து கொட்டாரக்கரை நோக்கி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரை கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்த விசாரணைக்காக அவரையும் பணத்தையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
Next Story

