கோவையில் 48 மணி நேர வேலைநிறுத்தம் – வருவாய் துறை பணிகள் பாதிப்பு !

X
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 323 வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பணிகள் செயலிழந்தன. சாதி சான்றிதழ், வருமானச் சான்று, பட்டா மாறுதல் போன்ற பொதுமக்கள் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டதால், சான்றிதழ்களுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். போராட்டத்திற்கு பிற துறை அலுவலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Next Story

