ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 4.8.வது வார்டுகளில் 1மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 4.8.வது வார்டுகளில் 1மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 4.8.வது வார்டுகளில் 1மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி உட்பட்ட 27 வார்டுகள் உள்ளன.இதில் 4வது வார்டு மற்றும் 8வது வார்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக அப்பகுதியில் முறையாக நல்ல தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் மற்றும் அன்றாட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் 100க்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1. மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ராசிபுரம் காவல்துறையினர், மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் அன்றாட வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவதிக்கு உள்ளாகியது குறிப்பிடப்பட்டது.. மேலும் இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் 20 நாட்களில் இருந்து ஒரு மாதத்துக்கு ஒரு முறை வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர் என்றும் பல இடங்களில் போர் முறையாக பராமரிப்பது இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் பள்ளிக்கும் அன்றாட வேலைக்கு செல்வதும் மிகவும் சிரமமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story