நாமக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுத்த நாமக்கல் மாநகராட்சி ஆணையர்.

நாமக்கல்  மக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுத்த நாமக்கல் மாநகராட்சி ஆணையர்.
X
பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் பொதுமக்களுக்கு வணக்கம்.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)2026 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பூர்த்தி செய்த படிவங்களை மாநகராட்சி அலுவலகம் அல்லது தங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதற்காக அமர்த்தப்பட்ட பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைக்குமாறும் அல்லது தங்கள் பகுதியில் உள்ள நியாய விலை கடை விற்பனையாளர்களிடமும் ஒப்படைப்பு செய்யலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு படிவம் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்பதால் அனைத்து வாக்காளர்களும் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை முறையாக ஒப்படைப்பு செய்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளவும் இதன் மூலம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது .


Next Story