அறந்தாங்கியில் மீண்டும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு!!

அறந்தாங்கியில் மீண்டும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு!!
X
அறந்தாங்கியில் மீண்டும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்ததொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் புதுக்கோட்டை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. அறந்தாங்கி அலுவலகம் புதுக்கோட்டை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதால், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தை மீண்டும் அறந்தாங்கியில் திறக்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர். வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் இன்று முதல் பட்டுக்கோட்டை ரோடு அண்ணாமலை தெரு பெடரல் பேங்க் எதிரில் செயல்படுகிறது. புதிய அலுவலத்திற்கு சென்ற அறந்தாங்கி வர்த்தக சங்கத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Next Story