அறந்தாங்கி அருகே இறந்தவரின் சடலத்தை வயலுக்குள் எடுத்துச் செல்லும் அவலம்!!

அறந்தாங்கி அருகே இறந்தவரின் சடலத்தை வயலுக்குள் எடுத்துச் செல்லும் அவலம்!!
X
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீரனூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடிற்கு செல்ல பாதை இல்லாமல் அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீரனூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடிற்கு செல்ல பாதை இல்லாமல் அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள விஜயகாந்த் என்பவர் இறந்த உயிரிழந்தார். உயிரிழந்த விஜயகாந்த் சடலத்தை அவரது உறவினர்கள் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல் வெளியில் எடுத்துச் சென்று, தண்ணீர் சூழ்ந்த பகுதியில் அடக்கம் செய்தனர். எனவே கீரனூர் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story