அறந்தாங்கி அரசு கல்லூரியில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்!!

அறந்தாங்கி அரசு கல்லூரியில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்!!
X
அறந்தாங்கி அரசு கல்லூரியில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில்,பெண் குழந்தைத் திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம், கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவரும், உள்ள புகார் குழு உறுப்பினருமான முனைவர் து.சண்முகசுந்தரம், நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் ப.ஜெரோம், து.நந்தினி ஆகியோர், உள்ளக புகார்க்குழுவின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள், குழந்தை திருமண தடுப்புச்சட்டம்,சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து மாணவியரிடையே கலந்துரையாடினர். விழிப்புணர்வு முகாமின் பயன்பாடு குறித்து பேசிய கல்லூரி கணிதவியல் முதலாம் ஆண்டு மாணவி தீபிகா, வரலாற்றுத்துறை முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீராஜமதி ஆகியோருக்கு நூற்பரிசுகள் வழங்கப்பெற்றன. முன்னதாகக் கல்லூரி கணிதவியல் துறைத்தலைவரும்,உள்ளக புகார்க்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப.கிளாடிஸ் வரவேற்றார்.நிறைவாக முதலாம் ஆண்டு வரலாற்று த்துறை மாணவி ஸ்ரீராஜமதி நன்றி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை தொகுத்து வழங்கினர்.ஏற்பாடுகளை கணினி அறிவியல் விரிவுரையாளர் வே.வாணி, வேதியியல் துறைத்தலைவர் து சிற்றரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story