கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தோகை முருகன் ரியல் எஸ்டேட்ஸ் நிறுவனம், நாமக்கல் மாவட்டத்தில் ‘ஆருத் அவென்யூ’ என்ற பெயரில் புதிய வீட்டு மனைப் பிரிவை அமைத்துள்ளது.
நிர்வாக இயக்குனர் சந்தோஷ் முருகன் முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் சதீஷ் மற்றும் சவுந்தர்யா வரவேற்புரை நிகழ்த்தினர்.சின்னத்திரை நடிகை சுனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய வீட்டு மனைப் பிரிவை தொடங்கி வைத்தார். இதுகுறித்து நிர்வாக இயக்குனர் சந்தோஷ் முருகன் கூறுகையில்.“எங்களது நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட அனுபவம் பெற்றது. பொதுமக்களின் வீட்டு மனை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீட்டு மனைப் பிரிவுகளை அமைத்து விற்பனை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தற்போது நாமக்கல் மாவட்டத்தில் ‘ஆருத் அவென்யூ’ என்ற பெயரில் புதிய வீட்டு மனைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் முழுமையாக காம்பவுண்ட் சுவர், முகப்பில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ரோமன் ஆர்ச், கண்காணிப்பு கேமராக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள், விசாலமான தார்சாலை, சோலார் மின்விளக்குகள், வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் 110 வீட்டு மனைக்கல்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.முன்னதாக நடிகை சுனிதா பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு ஆஃபராக ஸ்கூட்டி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த விழாவில் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் தோகை முருகன் ரியல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.




