ஆலங்குளத்தில் 49 மின்கல வாகனங்கள் அளிப்பு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 16 ஊராட்சிகளுக்கு 49 மின்கல வாகனங்கள் அளிக்கப்பட்டன. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து மின்கல வாகனங்களை அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் வழங்கினாா். இதில் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அலிஸ் தாயம்மாள், கல்யாணராம சுப்பிரமணியன், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Next Story

