மகளிர் சுய உதவி குழு தின விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 49 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கினர்

X

மகளிர் சுய உதவி குழு தின விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 49 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கினர்
திருப்பத்தூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு தின விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 49 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுய உதவிக் குழு தின விழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.49.14 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சென்னையில் வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் காணொலி காட்சி வாயிலாக வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்விழாவின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்திரவல்லி.இ.ஆ.ப. தலைமையில் நடைப்பெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் 483 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 5535 பயனாளிகளுக்கு ரூ.49.14 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊரக பகுதிகளில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 302 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.20/- கோடி நேரடி வங்கிக்கடன், 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ 72.50/- இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகர்ப்புர பகுதிகளில் உள்ள 131 மகளிர் சுய உதவிக்கழுக்களுக்கு ரூ.12.22 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் உதவிகள் என ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள 483 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49.14 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாசலம் மகளிர் திட்ட அலுவலர் தனபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் மற்றும் 1000 ற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு தின விழாவினை சிறப்பித்தனர்.
Next Story