கோவை: தடுப்பூசி போட்ட 49 நாள் ஆண் குழந்தை மரணம்: பெற்றோர் புகார்

கோவை: தடுப்பூசி போட்ட 49 நாள் ஆண் குழந்தை மரணம்: பெற்றோர் புகார்
X
கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் 49 நாட்கள் ஆன ஆண் குழந்தை, தடுப்பூசி செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் – தனபாக்கியம் தம்பதியினரின் 49 நாட்கள் ஆன ஆண் குழந்தை, தடுப்பூசி செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனபாக்கியம், கடந்த வெள்ளிக்கிழமை கே.கே.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, மருத்துவர் இல்லாத காரணத்தால் செவிலியரிடம் சொட்டு மருந்தும் நான்கு தடுப்பூசியும் பெற்றதாக கூறியுள்ளார். தடுப்பூசிக்குப் பிறகு குழந்தைக்கு தொடையில் வீக்கம், அழுது தூங்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. இன்று காலை மூக்கு, வாயில் இரத்தம் வெளியேறி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story