சோத்துப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 49 - வது ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா

X
சோத்துப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 49 - வது ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 49-வது ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன அலங்காரத்தில் ஸ்ரீ பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து மாலை முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்து விரதமிருந்த பக்தர்கள் முதுகில் அழகு குத்தியவாறு வெள்ளி தேர் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் காவடிகள் எடுத்தும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

