பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.95 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.95 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.95 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (22.02.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார் திருவாளந்துரை ஊராட்சி மற்றும் கை.களத்தூர் ஊராட்சிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர், பெரிய வடகரை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பெரிய வடகரை இஸ்லாமியர் தர்கா அருகில் கவர்பனை செல்லும் வழியில் ரூ.80 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரியாம்மாபாளையம் ஊராட்சியிலும், தொண்டமாந்துறை விஜயபுரம் கிராமத்திலும் தலா ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அரும்பாவூர் பேரூராட்சியில் கொட்டாரக்குன்று சாலையில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், தொண்டமாந்துறை ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் சிறிய நீர்தேக்க தொட்டியினையும் திறந்து வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் மலையாளப்பட்டியில் எம்.வி.புரம் முதல் பூமிதானம் வரை முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் ரூ.80.5லட்சம் மதிப்பில் அமைக்கப்ப்ட்டுள்ள தார்ச்சாலையினையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் மலையாளப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1.31 கோடி மதிப்பில் சாஸ்திரிபுரம் தார்சாலை அமைக்கும் பணியினையும், நெடுவாசல் கவுள்பாளையம் சாலை முதல் எறையூர் வரை ரூ.1.72கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.4.95கோடி மதிப்பிலான முடி உற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கின்றார். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைளின் அடிப்படையில், பேருந்து வசதி, சாலை வசதி, புதிய நியாயவிலைக்கடைகள் என ரூ.4.95 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், அட்மா தலைவர் ஜெகதீசன், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story




