கோவை: 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி சாதனை !

X
தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தபடி, இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்ற இந்தத் தேர்வுகளின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த ஆண்டு பொதுத் தேர்வில், பொள்ளாச்சி அருகே உள்ள சிறுக்களந்தை விக்னேஸ்வரா தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ அபார சாதனை படைத்துள்ளார். அவர் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குறிப்பாக, நான்கு பாடங்களில் முழுமையான 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் மட்டும் அவர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம், சுபஸ்ரீ மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது இந்தச் சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொள்ளாச்சி வட்டாரத்தில் இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

