திடீர் வாகன தணிக்கையில் 5 டூவீலர்கள் பறிமுதல் ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை

திடீர் வாகன தணிக்கையில் 5 டூவீலர்கள் பறிமுதல் ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை
பெரியமணலி பகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி அபாயகர மான வகையில் பொதுச் சாலையில் வாகனங்கள் இயக்கப்படுவது குறித்து, திருச்செங்கோடு வட் டார போக்குவரத்து அலுவலர் சரவணன், மோட்டார் வாகன ஆய் வாளர் பாமா பிரியா மற்றும் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அலுவலர்கள், எலச்சிபாளையம் போலீசாருடன் இணைந்து, நேற்று சிறப்பு கூட்டு கன தணிக்கை வாகன மேற்கொண்டனர். இதில் 7 வாகனங் களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கி, 5 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மோட் டார் வாகன சட்டம் 199 (ஏ)யின்படி வழக் குப்பதிவு செய்யப்பட்டு எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய அலுவ லர்களுடன் இணைந்து பில், நடந்த சோதனையில், உரிய அனுமதி பெறா மல் சொந்த பயன்பாட்டு வாகனத்தை, வாடகை வாகனமாக பயன்படுத் தப்பட்டது கண்டறியப் பட்டு, காரை பறிமுதல் செய்து, திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மேலும் எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லிபோன்றவை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அதிக சுமை, தார்ப்பாய் போர்த் தப்படாதது, போன்ற குற்றங்கள் கண்டறியப் பட்டு 5 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த வாகன தணிகையின் மூலம் ₹2லட்சத்து 18 ஆயி ரத்து 500 அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.
Next Story