திருட்டு, கஞ்சா: குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது!
Thoothukudi King 24x7 |1 Aug 2024 5:35 AM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் திருச்செந்தூர் சாலை ராஜபாண்டி நகரைச் சேர்ந்த க. சரோஜ்குமார் (24) தனியார் கல்லூரி சந்திப்புப் பகுதியிலும், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மு. தட்சிணாமூர்த்தி (20), 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த மு. இசக்கிமுத்து (22) ஆகியோர் எம்ஜிஆர் நகர் சந்திப்புப் பகுதியிலும் கஞ்சா விற்றதாக தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வாகைகுளத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கதவை உடைத்துத் திருட முயன்ற வழக்குத் தொடர்பாக கூட்டாம்புளி ஞானம் நகர் மு. ரஞ்சித்குமார் என்ற சீனிவாசன் (25), கூட்டாம்புளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரா. சிவக்குமார் (23) ஆகியோரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆய்வாளர்கள் ராஜாராம் (தென்பாகம்), வனசுந்தர் (புதுக்கோட்டை) ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணனின் பரிந்துரை, ஆட்சியர் கோ. லட்சுமிபதியின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், 5 பேரையும் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்..
Next Story