விதிமுறைகளை மீறிய 5 மருந்து கடைகள் மீது வழக்கு
Salem (west) King 24x7 |6 Aug 2024 8:46 AM GMT
மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் விதிமுறைகளை மீறி மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகிறதா? என மருந்து கட்டுப்பாட்டு மண்டல உதவி இயக்குனர்கள் மாரிமுத்து (சேலம்), சதீஷ் (நாமக்கல்) ஆகியோர் மேற்பார்வையில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, மருந்து சீட்டு மற்றும் முறையாக பில் போடாமல் மாத்திரைகளை விற்பனை செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக 5 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டின் படியும், அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருந்துகளை மட்டுமே விற்பனை பட்டியலுடன் விற்பனை செய்ய வேண்டும். மேலும் மருந்து சீட்டின் நகல்களை கடைக்காரர்கள் முறையாக பராமரிக்க வேண்டும். மருந்து சீட்டு பதிவேட்டில் நோயாளிகள் பெயர், முகவரி மற்றும் டாக்டரின் பெயர், முகவரியை பதிவேற்றம் செய்து பராமரிக்க வேண்டும் என்றனர்.
Next Story