ராசிபுரத்தில் பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியரின், 5 பவுன் செயின் பறிப்பு.
Rasipuram King 24x7 |14 Aug 2024 6:44 PM ISTராசிபுரத்தில் பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியரின், 5 பவுன் செயின் பறிப்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா, 42. ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் வேதியல் துறையில் லேப் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து தனது வீட்டிற்கு செல்ல XL இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ராசிபுரம் எல்ஐசி அருகே வந்தபோது, பின்னால் பின் தொடர்ந்து பைக்கில் வந்த, 2 பேர் சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர். சுதா தனது கழுத்தில் 5 பவுன் மற்றும் 2 பவுன் செயினை அணிந்திருந்தார். செயின் பறிப்பின் போது, சுதா கையால் இருக்கி பிடித்ததில், 2 பவுன் செயின் தப்பியது. 5 பவுன் செயினை கொள்ளையர்கள் அறுத்துச் சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story


